மூன்று சேனல்களில் மெர்சல் ஆடியோவிழா

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ஏற்கனவே உதயா, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்துள்ள விஜய்க்கு அவரது காம்பினேஷனில் மெர்சல் மூன்றாவது படம். அதனாலோ என்னவோ, ‘மெர்சல்’ படத்தின் பாடல்களுக்காக விஜய் ரசிகர்கள் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ‘ஆளப்போறான் தமிழன்…’ என்ற பாடலை சிங்கிள் டிராக்காக வெளியிட்டனர். இந்தப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில், முழு ஆல்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அடுத்து வரும் 17 ஆம் தேதி நீதானே என்ற இன்னொரு பாடலையும் சிங்கிள் டிராக்காக வெளியிட உள்ளனர். அதோடு, ‘மெர்சல்’ படத்தின் ஆடியோ விழாவை வரும் 20 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்தவிருக்கின்றனர்.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி ஆகியோர் அடங்கிய ‘மெர்சல்’ படக்குழுவைச் சேர்ந்தவர்களுடன் ரஜினி, கமல் ஆகியோரும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இதனால் இந்த விழாவை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு டிவி சேனல்கள் போட்டிபோட்டு வருகின்றன.

‘மெர்சல்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கும் ஜீ தமிழ் சேனல் மட்டுமின்றி, வேறு இரண்டு சேனல்களும் இந்த விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளன. அது மட்டுமல்ல யு டியூபிலும் நேரடி ஒளிப்பரப்பாகிறது.