‘ஆளப்போறான் தமிழன்’ பாடலில் மெர்சல் காட்டுகிறாரா ஏ.ஆர்.ரஹ்மான்? 


ஏ.ஆர்.ரஹ்மான், விஜய். ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் களமிறங்கியிருக்கிறது மெர்சல் படத்தின் முதல் சிங்கிள்.

உதயா படத்திற்குப் பிறகு ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. அப்போது விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து கொடுத்த ஒரு பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் “அப்ப பண்ணின விஜய் வேற. இப்ப பண்ற விஜய் வேறயா இருக்கார். அதுனால அவர் மூலமா எதும் நல்ல மெசேஜ் சொல்லணும்னு ‘எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே’னு ஓபனிங் சாங் வெச்சேன்” என்று சொல்லியிருந்தார்.

விஜய்யும் அதே பேட்டியில் “ஃபுல் ஸ்பீட்ல போகற அந்தப் பாட்டுல கடைசி பல்லவில கொஞ்சம் ரேஞ்ச் அதிகமா முடியும். ரொம்ப பிடிச்ச இடம் அது. நல்ல மெசேஜ் சொல்ற பாட்டு’ என்றிருந்தார்.

அதன்பிறகு இருவருமே வேறு வேறு உயரங்களை அடைந்திருக்கின்றனர். மெர்சல் படத்தின், இந்தப் பாடல் எப்படி இருக்கிறது?

பெண்கள் கோரஸ் பின் ஆண்கள் கோரஸ் என்று துவங்கும் பாடல் ‘ஆளப்போறான் தமிழன்’ என்று உயர்கிறது குரல்.

மிருதங்கம், நாதஸ்வரத்துடன் வரும் முதல் இடையிசை ஃப்யூஷன் வித்தியாசம் என்றால், அதைத் தொடர்ந்து வரும் பீட்ஸ் விஜய்க்கென்றே டான்ஸ் ஸ்பெஷலாக ரஹ்மான் கொடுத்திருக்க வேண்டும்.

பல்லவியின் மெட்டு, வழக்கமாகத்தான் இருக்கிறது. வரிகளில் கொஞ்சம் ஸ்பீடெடுக்கும் என்றால் இல்லை. ஆனால் அதே ஸ்பீடில் போகும் பாட்டிலும் ஏ.ஆர். இசைக்கருவிகளை மாற்றி மாற்றி வசீகரிக்கிறார். பல்லவி முடிந்ததும், பழைய பாணி இசை உட்புகுகிறது. திரையில் காட்சியாக கவரலாம். திடீரென்று தபேலா இசையுடன் வரும் பெண்குரல் தொகையறா.. மயிலிறகு.

மீண்டும் ஸ்பீடெடுத்து பெண்கள் கோரஸில் பல்லவி.

’ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்’, ‘வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே’ வரிகளில் விவேக் பளிச்சிடுகிறார். வரிகளெல்லாமே எதோ ஒரு ஐடியாவுடனே எழுதப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

ஹீரோயிச இண்ட்ரோவாக விஜய்க்கு, வரிகளில் விவேக்கும், டான்ஸ் ஆடவென்றே பீட்ஸில் ரஹ்மானும் விருந்து படைத்திருக்கிறார்கள். நிச்சயம் ஒரு செம மெலடியும் கொடுப்பார் என்று காத்திருக்கிறேன்.

பாடல் வரிகள்:-

கோரஸ்:

ஊருக்கண்ணு உறவுக்கண்ணு

உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு

சின்ன மகராசன் வரான்

மீச முறுக்கு

எங்க மண்ணு தங்க மண்ணு

உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்

ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்

எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்

கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

பாடல்:

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே

வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்

நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்

இன்னும் உலகம் ஏழ

அங்க தமிழப்பாட

பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி…

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்

காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

சரணம்:

ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்

மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்

தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்

உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்

தாய்நகரம் மாற்றங்கள் நேரும்

உன்மொழி சாயும் என்பானே

பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே

கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே

முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்

ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்

எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்

கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்

நெடுந்தூரம் உன்இசை கேட்கும்

பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்

வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்

விழிச்சாலும் நெசந்தான்

உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்

வருங்காலம் வாசனை சேர்க்கும்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே

வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்

மாறாது எந்நாளும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s